தமிழகத்தில் கோடைகாலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல் அமைப்பதற்கு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ளனர். தற்போது தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ அனுமதி கொடுத்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தண்ணீர் பந்தல் திறக்க விரும்பும் எந்த ஒரு அரசியல் கட்சியினரும் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் அமைக்கலாம். அதன் பிறகு தண்ணீர் பந்தல் அமைப்பதன் மூலம் எந்த ஒரு அரசியல் ரீதியான செயல்பாட்டிலும் ஈடுபடக்கூடாது.

தண்ணீர் பந்தல் திறக்கும்போது கண்டிப்பாக தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிக்க வேண்டும். தண்ணீர் பந்தல் திறக்க விரும்பும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தின் மேற்கண்ட விதிமுறைகளை பபின்பற்றி சுகாதாரமான மற்றும் தூய்மையான குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அவரவர் எல்லைக்குள் அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடித்து தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.