சென்னை அயனாவரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் பழைய ஸ்பீக்கரை வாங்கி அதனை சரி செய்து விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இவருடைய மகள் ஸ்டெபிரோஸ். இவருக்கு 7 வயது ஆகிறது. சதீஷ்குமார் தனது மகளுடன் நேற்றிரவு ஆலந்தூர் பகுதியில் உள்ள விஜய் பார்க் உணவகத்திற்கு சென்று ரூம் எடுத்து தங்கினார்.

மறுநாள் காலை 5 மணிக்கு சதீஷ்குமார் தனது அக்கா கெசியாவை மொபைல் மூலம் தொடர்பு கொண்டு “நான் உணவகத்தில் அறை எடுத்து தங்கி இருக்கிறேன். எனது மகளை கொலை செய்து விட்டேன். நானும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்”, என்று கூறினார். அதனை கேட்டதும் அதிர்ச்சி அடைந்த கெசியா உடனடியாக அவர் கூறிய உணவகத்திற்கு விரைந்து சென்றார்.

அங்கு உணவகத்தில் இருந்த பணியாளருடன் சதீஷ்குமார் தங்கி இருந்த அறைக்கு சென்று பார்த்தபோது அவர் தனது மகளை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சதீஷ்குமாரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இது குறித்த தகவல் காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சதீஷ்குமாரின் மகள் ஸ்டெபிரோஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திய போது சதீஷ்குமார் அவரது மனைவியுடன் பிரிந்து வசித்து வரும் நிலையில் சதீஸுடன் வளர்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் குழந்தையை தன்னிடம் அனுப்பும்படி அழுத்தம் கொடுத்ததால் மனஅழுத்தத்தில் இருந்த சதீஷ் இந்த முடிவை எடுத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக சதீஷ்குமாரின் மனைவி மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடந்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.