கோலிவுட் சினிமாவில் பன்முக திறமைகளுடன் மாபெரும் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் இப்போது விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

அண்மையில் நடந்த ஆனந்த விகடன் விருது விழாவில் கமல்ஹாசன் முன்னணி மேடையில் நடிகர் மணிகண்டன் “என்னுடைய இடத்தை லோகேஷ் பிடித்துக்கொள்ள பார்க்கிறார். அதற்கு நான் விட மாட்டேன்” என கூறினார். அதற்கு லோகேஷும் பதிலுக்கு “ஆயிரம் மணிகண்டன் வந்தாலும் சட்டையை கிழித்துக்கொண்டு சண்டையிட நான் தயார்” என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.