தமிழ் சின்னத்திரையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் கயல். இந்த தொடரில் நாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி எனும் சீரியலில் வில்லியாக நடித்து இருந்தார்.

தற்போது கயல் தொடர் வாயிலாக இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. தல அஜித் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சைத்ரா ரெட்டி. இவ்வாறு சின்னத்திரை, வெள்ளித்திரை ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் சைத்ரா ரெட்டி தற்போது ஒரு குழந்தைக்கு லிப் கிஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.