காரால் ஒரு குடும்பம் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளும் சிக்கல்களும் தான் “சொப்பன சுந்தரி” படத்தின் கதைக்களம் ஆகும்.

கதை தொடங்கியதும் அகல்யா (ஐஸ்வர்யா ராஜேஷ்) குடும்பத்தின் வறுமை நிலை காட்டப்படுகிறது. அவருடைய அப்பா படுத்த படுக்கையாக உள்ளார். மேலும் குடும்பத்தில் நடைபெற்ற சண்டை காரணமாக அண்ணன், தன் மனைவியுடன் வீட்டை விட்டு சென்று விடுகிறார். இதனிடையே அக்கா பேச்சுத்திறன் இல்லாத ஒரு மாற்றுத்திறனாளி ஆவார்.

இப்படி குடும்பத்துக்குள் கோடி கஷ்டங்களா என நாம் நினைத்துக்கொண்டிருக்கும் போது, அகல்யாவின் வீடு தேடி லக்கி ப்ரைஸாக வருகிறது ஒரு கார். அக்காரை வரதட்சணையாகக் கொடுத்து அக்காவின் திருமணத்தை நடத்துவது என அகல்யாவின் குடும்பம் முடிவு செய்கிறது. எனினும் திடீரென்று நடக்கும் 2 சம்பவங்களால் மொத்தமும் தலைகீழாக மாறுகிறது.

இதில் ஒன்று விபத்து, மற்றொன்று அகல்யா குடும்பத்திற்கும் அவரது அண்ணன் குடும்பத்திற்கும் இடையில் நடக்கும் சண்டை. இதன் காரணமாக வரும் பாதிப்புகள் என்ன..? எப்படி அகல்யா இவற்றை சரி செய்கிறார்..? அந்த கார் கடைசியாக யாருக்கு சேர்கிறது..? என்பது தான் படத்தின் மீதிக்கதை ஆகும். டைரக்டர் எஸ்.ஜி.சார்லஸ் இப்படத்தை ஒரு காமெடி (அ) டார்க் காமெடி படமாக கொடுக்க முயன்றிருக்கிறார்.