காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், சவுக்கு சங்கரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு அழைத்துச் சென்றனர். கோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் லாரி மோதியதில், சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்ட வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், காயமடைந்த அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.