தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இந்த படம் தோல்வி அடைந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் திரைப்படம் வெளியானது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதால் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக விக்னேஷ் சிவன் மாறினார். நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்திருந்தார்கள்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் முதலில் நஸ்ரியாவை தான் ஹீரோயினாக நடிக்க வைக்க திட்டமிட்டதாக கூறியுள்ளார். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் நஸ்ரியாவை விட நயன்தாரா தான் நானும் ரவுடிதான் படத்தின்  கதாபாத்திரத்திற்கு கரெக்டாக இருப்பார் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து தான் நயன்தாராவை நானும் ரவுடிதான் படத்தில் கமிட் செய்துள்ளனர். மேலும் இந்த தகவலை இயக்குனர் விக்னேஷ் சிவன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.