தமிழர் திருநாளான தைப்பொங்கலை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழ்நாடு அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

இதற்காக முதற்கட்டமாக 248 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் தொகுப்புக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், இந்த ஆண்டு ரொக்கப் பணம் (Cash) வழங்கப்படுமா? அப்படி வழங்கப்பட்டால் அது எவ்வளவு இருக்கும்? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த காலங்களில் 1,000 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை ரொக்கம் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் பரிசு வழங்குவதற்கான டோக்கன்கள் எப்போது விநியோகம் செய்யப்படும் என்பது குறித்தும், பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இடம்பெறும் என்பது குறித்தும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் எனத் தெரிகிறது.