தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சியின் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு (Media and Communications) அணிக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, கட்சியின் கருத்துகளையும் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

“கழகத்தின் ஆக்கப்பூர்வப் பணிகளைத் தொய்வின்றி முன்னெடுத்துச் செல்ல இவர்களுக்குப் பாசத்தோடு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தனது அறிக்கையில் விஜய் குறிப்பிட்டுள்ளார்.

புதிய நிர்வாகிகள் பட்டியல் பின்வருமாறு:

பிரிவு பொறுப்பாளர்: கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திரு. A.ராஜ்மோகன் இந்தப் பிரிவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒருங்கிணைப்பாளர்கள்: செங்கல்பட்டைச் சேர்ந்த திரு. S.ரமேஷ் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த திருமதி. J.கேத்ரின் பாண்டியன் ஆகியோர் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.

தேசியச் செய்தித் தொடர்பாளர்கள்: ஜி. பெலிக்ஸ் ஜெரால்டு, வழக்கறிஞர் எம். சத்தியகுமார் மற்றும் மதுரை எம்.கே. தேன்மொழி பிரசன்னா ஆகிய 3 பேர் தேசிய அளவில் கட்சியின் குரலாகச் செயல்படுவார்கள்.

மாநிலச் செய்தித் தொடர்பாளர்கள்: முகில் வீரப்பன், அமலன் சாம்ராஜ், அனந்தஜித் மகியா, ஞான செல்வின் இன்பராஜ், முகமது இப்ராஹிம் மற்றும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் என 6 பேர் மாநில அளவிலான செய்தித் தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.