முன்னாள் பாகிஸ்தான் அதிவேக பந்துவீச்சாளர் சோயப் அக்தரின் மூத்த சகோதரர் ஷாஹித் அக்தர் கடந்த ஜூன் 24 ஆம் தேதி காலமானார். இந்த சோகச் செய்தியை அக்தர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட நிலையில், இஸ்லாமாபாத் எச்-8 மயானத்தில் நடந்த அவரது இறுதிச்சடங்கு வீடியோக்கள் தற்போது சர்வதேச அளவில் ஒரு மிகப்பெரிய சர்ச்சையையும் புயலையும் கிளப்பியுள்ளன.
இந்த இறுதிச்சடங்கில், இந்தியாவின் 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பகிரங்கமாக கலந்து கொண்டதாகக் கூறி வெளியாகி இருக்கும் வீடியோக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
Ex Cricketer Shoaib Akhtar's Brother died of heart attack!
Shahid Akhtar's funeral was attended by PMML Islamabad President Inam ur Rehman Kamboh and other LeT terrorists.
PMML serves as a proxy for LeT. Why Were LeT Leaders/Terrorists There? pic.twitter.com/ldJiocolCl
— Megh Updates 🚨™ (@MeghUpdates) June 27, 2026
குறிப்பாக, கடந்த 2025 ஆம் ஆண்டு பஹல்காமில் 25 சுற்றுலாப் பயணிகளைக் கொடூரமாகக் கொன்ற பயங்கரவாதத் தாக்குதலின் மாஸ்டர்மைண்டும், லஷ்கர் அமைப்பின் துணைத் தலைவருமான சைஃபுல்லா கசூரி இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்றது வீடியோவில் அம்பலமாகியுள்ளது. இவருடன் ஐநா சபையால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹாஃபிஸ் சயீத்தின் அரசியல் பிரிவான பிஎம்எம்எல் (PMML) தலைவர் இனாம்-உர்-ரஹ்மானும் இதில் கலந்து கொண்டுள்ளார்.
இந்தியாவால் ‘ஆபரேஷன் சிந்து’ மூலம் முரித்கேவில் உள்ள லஷ்கர் தலைமையகம் அழிக்கப்பட்ட பின்னரும், பாகிஸ்தானில் இந்த பயங்கரவாதிகள் சுதந்திரமாக உலா வருவது, அந்த நாடு பயங்கரவாதத்திற்குத் தொடர்ந்து புகலிடம் அளிப்பதையே காட்டுவதாக இந்தியா தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்து சோசியல் மீடியாவில் விவாதங்களை உலுக்கி வருகிறது.
