தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பள்ளி மாணவிகளின் கால்களை தொட்டு சுலுக்கு எடுத்த அமைச்சர் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒருவேளை முதலுதவி செய்ய வேண்டும் என்றால் ஒரு பெண் ஆசிரியை கூப்பிட்டு மாணவிகளுக்கு உதவுமாறு சொல்லி இருக்கலாம். அதை விட்டுவிட்டு மாணவிகளின் கால்களை தொட யாருக்கு அதிகாரம் கொடுத்தது என்றார்.
அதன் பிறகு அமைச்சர் சரத்குமார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக ஐபிஎல் மேட்ச்சின் போது போதை பொருள் பயன்படுத்தியதாக வெளியான வீடியோ குறித்தும் பேசினார். அந்த வீடியோவிற்கு என் குழந்தைக்கு அப்போது ஒரு வயதுதான் என்றும் மாத்திரையை நுணுக்கி கொடுப்பதற்காகத்தான் அவ்வாறு செய்ததாகவும் அமைச்சர் சரத்குமார் விளக்கம் கொடுத்திருந்தார்.
#WATCH | “அமைச்சர் சரத்குமார் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி மாத்திரையை நொறுக்கி டெமோ காட்ட வேண்டும்”
– கீதா ஜீவன், திமுக முன்னாள் அமைச்சர்#SunNews | #TVK | #TabletCrushing | #DMK pic.twitter.com/z1rriPbnQu
— Sun News (@sunnewstamil) June 27, 2026
குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாத போது எதற்காக ஐபிஎல் மேட்சுக்கு அவர் செல்ல வேண்டும் என்றும் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்ற கவலை சிறிது கூட அவரது முகத்தில் இல்லை என்றும் கூறிய கீதா ஜீவன் ஒருவேளை அவர் மாத்திரையை தான் அவ்வாறு செய்தால் என்றால் மறுபடியும் ஒரு ஏடிஎம் கார்டை எடுத்து அதே போன்று ஒரு மாத்திரையை நுணுக்கி அவர் டெமோ காட்ட வேண்டும் என்றார்.
அதன் பிறகு ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு எந்த மருத்துவமனைகளிலும் மாத்திரைகள் கொடுப்பது கிடையாது எனவும் சிரப் மட்டும் தான் கொடுப்பது வழக்கம் எனவும் கூறிய கீதா ஜீவன் இது போன்றவர்களால் எப்படி நாட்டை நல்வழிப்படுத்த முடியும். ஒருவேளை அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்றால் எளிதாக மருத்துவ பரிசோதனை செய்து தான் அவ்வாறு செய்யவில்லை என்று நிரூபிக்க வேண்டும் என்றார்.
மேலும் ஒருவேளை குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்றால் அந்த வீடியோவை எதற்காக தக்கலைப் என்று தலைப்பு போட்டார்கள் அப்படி என்றால் அதை யாராலும் செய்ய முடியாத செயல் தில்லாக நான் செய்து விட்டேன் என்று தானே அர்த்தம் என்றும் கேள்வி எழுப்பினார். அதோடு தமிழக முதலமைச்சர் விஜய் அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
