தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அரசின் மீதும் ஆளுங்கட்சியினர் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களைக் காவல்துறையைக் கொண்டு ஒடுக்கும் முயற்சிகள் நடப்பதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. முந்தைய திமுக ஆட்சியின் அதே பாதையில் தற்போதைய அரசும் பயணிக்கிறதோ என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
கடந்த ஒரு மாத காலத்திற்குள் மட்டும், சமூக வலைதளங்களில் தவெக கட்சியினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் விமர்சனங்களின் காரணமாக, மாற்றுக் கருத்துக் கொண்ட 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சரின் குடும்பத்தை விமர்சித்த தவெக தொண்டருக்குப் பதிலடி கொடுத்த ‘We The Leaders’ அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எல்லை மீறும் அவதூறுகளைக் கண்காணிப்பது அவசியமான ஒன்றுதான் என்றாலும், ஆட்சியையும் ஆளுங்கட்சியையும் நோக்கி வைக்கப்படும் ஒவ்வொரு நியாயமான விமர்சனத்தையும் வழக்குகளையும் கைது நடவடிக்கைகளையும் கொண்டு மௌனமாக்க முயல்வது ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு வழிவகுக்காது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்களின் கவனத்திற்கு,
திமுக ஆட்சி வீழ்ச்சியடைந்ததற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, ஆளுங்கட்சியினர் என்ற அதிகார போதையில், மக்களின் விமர்சனங்களையும் எதிர்க்கருத்துகளையும் அலட்சியப்படுத்தியதுதான். அதே பாதையில் உங்கள் அரசும் பயணிக்கிறதோ என்ற… pic.twitter.com/gaAgiDwJcB
— K.Annamalai (@annamalai_k) August 18, 2026
“>
முதலமைச்சரை மகிழ்விக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தன்னிச்சையாகச் செயல்படுவதைத் தவெக தலைமை அனுமதிக்கக் கூடாது. அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொதுவான முதலமைச்சராக விளங்கும் விஜய், விமர்சனங்களுக்கும் ஜனநாயகக் குரல்களுக்கும் உரிய இடமளித்து, இந்த அடக்குமுறைப் போக்கை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தீவிரக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.
