தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்ததோடு, மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகள் மற்றும் தீர்மானங்கள் குறித்துப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் அண்மையில் நடைபெற்ற தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய முதல்வர் விஜய்க்கு நன்றி தெரிவிக்கப்பட்டதோடு, தவெக அரசு வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்துள்ளதற்கும் நேரில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. அனைத்து அரசு நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில், தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு இடையே அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர்கள் அனைவரும் ஒற்றைக் குரலாக நிற்பதை இந்திய ஒன்றியத்தின் ஆட்சியாளர்களுக்கு உணர்த்தும் வகையில் முதல்வர் கையாண்ட முறையும் பாராட்டப்பட்டது.

தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 125 தீர்மானங்களின் தொகுப்பு முதலமைச்சரிடம் வழங்கப்பட்டது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் வழியில் நின்று, தமிழ்நாட்டில் மாநில சுயாட்சி உரிமையை மிகக் குரல் உயர்த்திப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்தத் தமிழ் தேசியம் என்பது பிற மொழி பேசுவோருக்கு எதிரான வெறுப்பு அரசியல் அல்ல; சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை மற்றும் மாநில உரிமைகளை மையமாகக் கொண்டது என்பது சுட்டிக்காட்டப்பட்டது. மேகமலையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் விவசாயிகளை வெளியேற்றக் கோரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, தமிழக அரசு உடனடியாக சீராய்வு மனு தாக்கல் செய்து அப்பகுதி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனத் கோரிக்கை விடுக்கப்பட்டது.

“>

 

கோவையில் கொல்லப்பட்ட மாணவன் அமுதன் விவகாரத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தொடர்பு இருப்பதாகப் பெற்றோரும் பல்வேறு அமைப்பினரும் குற்றம் சாட்டி வருவதைக் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இக்கொலை வழக்கு குறித்து விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைப்பதோடு, மாநிலம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை ஒடுக்கத் தனிப்படைத் தாக்குதல் பிரிவு ஒன்றைக் உருவாக்க முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விசிக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.