அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்றுப் படுதோல்வி அடைந்துள்ள சம்பவம் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, இந்தியப் பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா வீசிய ஒரே ஓவரில் 27 ரன்களை விளாசியது உட்பட அதிரடியாக ஆடி 182 ரன்கள் குவித்த நிலையில், 183 ரன்கள் என்ற இலக்கை நோக்கிஆடிய இந்திய அணி மூத்த பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் வெறும் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது.

“>

எந்தவொரு கிரிக்கெட் வடிவத்திலும் அயர்லாந்து அணியிடம் இந்தியா தோற்பது இதுவே முதல்முறை என்பதால், 15 வயதே ஆன இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷியை அணியில் சேர்க்காமல் ஓரங்கட்டிய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் கடுமையாக விமரிசித்து வரும் சூழலில், ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இரண்டாவது போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.