திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற காறையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலில், பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கிய விலைமதிப்பற்ற ஐம்பொன் டாலரை, கோயில் பூசாரியே முறைகேடாகத் திருடி அணிந்து சுற்றிவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த ஸ்ரீ பூரணசில்ப கலைக் கூடத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர், ஸ்ரீ பூரணபுட்கலா சமேத ஸ்ரீ சொரிமுத்து அய்யனாரின் திருவுருவம் பொறிக்கப்பட்ட ஐம்பொன் டாலர் மாலையைத் கோயிலில் பணியாற்றும் பூசாரி ஒருவரிடம் பாதுகாப்பாகச் சமர்ப்பித்துள்ளார். ஆனால், இந்த விவரம் கோயில் நிர்வாகத்திற்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை. நிலைமையைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் பூசாரி, யாருக்கும் தெரியாமல் அந்த ஐம்பொன் டாலரைத் திருடித் தானே அணிந்து கொண்டுள்ளார். கடந்த மாதம் 12-ம் தேதி நடைபெற்ற ஆடி அமாவாஸை திருவிழாவின் போது, கோயிலுக்கு வந்திருந்த அந்த பக்தர், பூசாரி தன் கழுத்தில் அந்த ஐம்பொன் டாலர் மாலையை அணிந்திருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தார்.

“>

 

இது குறித்துக் கோயில் நிர்வாகத்திடம் பக்தர் முறையிட்டும் முறையான விளக்கமோ அல்லது நடவடிக்கையோ எடுக்கப்படாததால், அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.