தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 450 கிலோ போதைப்பொருள் (குட்கா) பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கடத்தலின் பின்னணியில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் குணசேகரன் செயல்பட்டதாகக் கூறி, தவெக நிர்வாகி ஒருவர் ஸ்ரீவைகுண்டம் தவெக பொறுப்பாளர் சரவணனிடம் தொலைபேசியில் காரசாரமாக வாதாடும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. வெளியான இந்த ஆடியோ பதிவை சாட்டை துரைமுருகன் என்பவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ஆடியோ பதிவில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப்பொருட்களை விற்பனை செய்வதில் குணசேகரன் தான் முதன்மை நபராக விளங்குவதாகவும், இதனை அவர் ஒரு பெரிய தொழிலாகவே செய்து வருவதாகவும் தவெக நிர்வாகி குற்றம் சாட்டுகிறார். மேலும், தமிழக முதலமைச்சர் போதைப்பொருட்களுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்து வரும் இந்தச் சூழலில், தவெகவில் இப்படிப்பட்ட நபர்களுக்கு முக்கியப் பதவி வழங்கி வைத்திருப்பது கட்சித் தலைவர் விஜய்க்கு தான் மிகப்பெரிய அவப்பெயரைத் தேடித்தரும் என்று அக்கட்சியின் மீது உண்மையான அக்கறை கொண்ட அந்த நிர்வாகி, ஸ்ரீவைகுண்டம் பொறுப்பாளர் சரவணனிடம் ஆதங்கத்துடன் வாதாடுகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 450 கிலோ போதைப்பொருளை காவல்துறை பிடித்திருக்கிறது இதற்கு பின்னணியாக செயல்பட்டது சாத்தான்குளம் தவெக ஒன்றிய செயலாளர் குணசேகரன் தான் என்று திருவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணனிடம் வாதம் செய்யும் தவெக நிர்வாகியின் பரபரப்பான ஆடியோ !

காவல்துறை… pic.twitter.com/jIEIofStHF
— Duraimurugan (@Saattaidurai) June 27, 2026

இருப்பினும், இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றோ அல்லது காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றோ உறுதியான பதில் எதையும் சரவணன் கூறவில்லை எனத் தெரிகிறது. மாறாக, அவர் மிகவும் மெத்தனப் போக்கோடு, அலட்சியமாக பதில் அளிக்கும் விதமாகவே அந்த ஆடியோ அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காவல்துறை இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்தால், இதன் பின்னணியில் இருக்கும் மிகப்பெரிய போதைப்பொருள் கும்பல் வெளிச்சத்திற்கு வரும் என்றும், கட்சித் தலைமை உடனடியாக இதில் தலையிட வேண்டும் என்றும் அரசியல் விமர்சகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.