முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பிய கேள்விகளும், அதற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வரும் கருத்துகளும் அரசியல் வட்டாரத்திலும், இணையத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. “ஒரு வயது குழந்தைக்கு மருத்துவமனையில் மாத்திரை கொடுப்பது வழக்கமல்ல; அப்படி இருக்கையில் அந்த மாத்திரை யார் கொடுத்தது? குழந்தை அருகில் இல்லாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ள கீதா ஜீவன், அமைச்சர் சரத்குமார் அளிக்கும் விளக்கத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் கூறுவது உண்மை எனில் அமைச்சர் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மூலம் அதை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மிக முக்கியமாக, செய்தியாளர்கள் முன்னிலையில் மொபைல் போனைப் பயன்படுத்தி மாத்திரையை எவ்வாறு பொடியாக்க முடியும் என்பதை அமைச்சர் விளக்கிச் காட்ட வேண்டும் என்ற கீதா ஜீவனின் கோரிக்கை பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அமைச்சர் தனது விளக்க வீடியோவில் காமித்த அந்தப் பொடியானது, மிக்ஸியில் போட்டு அரைத்தது போல எந்தவொரு சிறு துகள்களும் இன்றி, பியூர் ஒயிட்டாக, நைஸ் பவுடர் போல மாவு வடிவில் இருந்ததுதான் இந்த சந்தேகத்திற்கு வலுசேர்த்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது மொபைல் போன்களைக் கொண்டு ஒரிஜினல் மாத்திரைகளை உடைத்துப் பொடியாக்கும் சவாலை (நெட்டிசன்கள் பாணியில் ‘கில்லி சரத்’ என்று குறிப்பிட்டு) பரவலாக முயற்சி செய்து பார்த்து வருகின்றனர்.

அப்படி போனை வைத்து மாத்திரையை நசுக்கும் போது, அது நைஸ் பவுடராக மாறுவது முற்றிலும் சாத்தியமற்றது (Impossible) என்றும், அதில் சொரசொரப்பு தன்மையும், சிறிய மற்றும் பெரிய துகள்களும் கண்டிப்பாக எஞ்சியிருக்கும் என்றும் அவர்கள் தங்களது அனுபவங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால், அமைச்சர் காட்டிய பொடி மாத்திரை பொடிதானா என்ற சந்தேகம் எழுவதாகவும், அவரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனின் கோரிக்கை முற்றிலும் நியாயமானதுதான் என்றும் இணையவாசிகள் பலரும் கமெண்ட் செய்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.