மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில், வாயில்லா ஜீவனான ஒரு பெண் குதிரையை நடுரோட்டில் வச்சு கொடூரமாக அடித்துத் துன்புறுத்திய ஒரு நெஞ்சை பதறவைக்கும் மிருக வதை சம்பவம் வெளிவந்து, ஒட்டுமொத்த சோசியல் மீடியாக்கள் முழுவதும் நெட்டிசன்களின் பயங்கர கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தூர் நரசிங் பஜார் சவுக் பகுதியில், கடந்த ஜூன் 25 ஆம் தேதி நள்ளிரவு 11 மணி அளவில் ஒரு பொது விழா நடைபெற்றுள்ளது. அந்த விழாவில், ஒரு நபர் அங்கிருந்த ஒரு வெள்ள நிறப் பெண் குதிரையை (Mare) வலுக்கட்டாயமாக டான்ஸ் ஆட வைக்க முயன்றுள்ளார்.

​அந்தக் குதிரை சரியாக ஆடாததால் ஆத்திரமடைந்த அந்த நபர், கையில் வைத்திருந்த தடிமனான குச்சியால் அந்தக் குதிரையை ஓங்கி ஓங்கி அடித்து, மிரட்டி, பயமுறுத்தி ஆட வச்சிருக்கான். இந்தத் திடுக்கிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்பவர் நெஞ்சங்களைக் கலங்க வைத்துள்ளது. அந்த வீடியோவில், அவன் குதிரையை மிகக் கொடூரமாக வதைப்பது அப்பட்டமாகத் தெரிந்தும், சுற்றியிருந்த ஏகப்பட்ட மக்கள் அதனைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றது பொதுமக்களிடையே செம கடுப்பைக் கிளப்பியுள்ளது.

​இந்த வீடியோவை பார்த்த விலங்குகள் நலனுக்காக வேலை செய்யுற ‘நீடித்தையல் பவுண்டேஷன்’ (Needytail Foundation) அமைப்பைச் சேர்ந்த பிரியான்ஷ் ஜெயின் என்பவர், சற்றும் தாமதிக்காமல் பந்தரிநாத் போலீஸ் ஸ்டேஷனில் சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளார். குதிரையைச் சித்திரவதை பண்ணுனது உறுதியானால், விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் செக்ஷன் 11-ன் படி கேஸ் பாயும் என்றும், குதிரைக்குப் பலத்த காயம் ஏற்பட்டிருந்தால் புதிய சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா (BNS) செக்ஷன் 325-ன் கீழ் 5 வருஷம் வரைக்கும் ஜெயில் தண்டனை அல்லது கடுமையான அபராதம் கிடைக்க வாய்ப்பிருக்கு என்றும் கூறப்படுகிறது. போலீஸார் தற்போது இந்த வீடியோவை வச்சு தீவிர விசாரணையை ஆரம்பிச்சிருக்காங்க!