பீட் மாவட்டத்தின் அம்பஜோகாய் பேருந்து நிலையத்தில், பேருந்தில் இடம் பிடிப்பதற்காகப் பயணிகள் இடையே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லாத்தூரைச் சேர்ந்த பாலாஜி தேவ்காடே என்ற அந்த நபர், புறப்பட்ட பேருந்தைப் பிடிப்பதற்காக வேகமாக ஓடிச் சென்றபோது எதிர்பாராத விதமாகத் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது பேருந்தின் பின்புறச் சக்கரத்திற்கு அடியில் சிக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு பேருந்து நிலையத்திலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது, தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஆரம்பகட்ட விசாரணையில், பாலாஜி தேவ்காடேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சில அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இருப்பினும், பேருந்து நிலையத்தின் பரபரப்பான சூழலில் பேருந்தை நோக்கி ஓடியபோது நிகழ்ந்த விபத்தா அல்லது உடல்நலக்குறைவால் ஏற்பட்ட உயிரிழப்பா என்பது குறித்து காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.

“>

 

பேருந்து நிலையத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், பயணிகள் பயணத்தின்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இந்தச் சம்பவம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. துரதிர்ஷ்டவசமான இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.