புனே அருகே லோஹாகட் கோட்டையில் தன் வருங்கால கணவர் கேதன் அகர்வாலைத் திட்டமிட்டு கொலை செய்த வழக்கில், சேத்தன் சௌத்ரி மற்றும் சியா கோயல் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விபத்து என்று முதலில் கூறப்பட்ட இந்தச் சம்பவம், விசாரணையில் முன்னரே திட்டமிடப்பட்ட கொடூரமான கொலை என்பது தெரியவந்துள்ளது.

நவம்பர் மாதம் நடைபெறவிருந்த திருமணத்தைத் தவிர்க்கவே சியா, தனது கள்ளக்காதலன் சேத்தனுடன் இணைந்து கேத்தனைத் தீர்த்துக்கட்டியுள்ளார். இதற்கு முன்பே மே மாதம் இதே கோட்டையில் கேத்தனைத் தள்ளிவிட சியா முயன்றதும், கேதனின் பாஸ்போர்ட்டைத் திருடித் தொலைத்ததும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தற்போது, சேத்தனும் சியாவும் ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஒன்றாக அமர்ந்து ரசித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் போட்டியில் இருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள், காவல்துறைக்கு முக்கிய ஆதாரமாக மாறியுள்ளன.

“>

 

சியாவின் சகோதரர் சாஹிலின் நண்பராக அறிமுகமான சேத்தனுக்கும், சியாவுக்கும் இடையே இருந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதை இருவரது குடும்பத்தினரும் அறிந்திருக்கவில்லை என்று கூறுகின்றனர்.

கொலையை மறைக்க சியா நடத்திய நாடகங்களும், இந்த வைரல் வீடியோவும் இந்த வழக்கின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.