இன்றைய காலத்தில் பலவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று கடும் விமர்சனங்களை பெற்றுள்ளது. அதாவது வெளிநாட்டு client ஒருவர் இந்தியாவில் உள்ள ஒரு அலுவலகத்திற்கு வருகை புரிந்த நிலையில் அங்கிருந்த ஊழியர்கள் அவரை வரவேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் வெளிநாட்டு client நின்று கொண்டிருந்த நிலையில் திடீரென ஊழியர்கள் நடனம் ஆடினர். அவர்கள் தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பாடல்களுக்கு நடனமாடிய நிலையில் வெளிநாட்டு client அவர்களின் நடனத்தை ரசித்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து அவர்களின் நடனத்தை கைத்தட்டி உற்சாகப்படுத்தினார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் கடும் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.
This is super cringe. Super, super cringe. And these women or girls, or whatever… oh god. I hope they find some honor, some self-respect. Stop treating Europeans as gods. However, they must first start thinking more positively about themselves. pic.twitter.com/3cPuy2y5A5
— Jayant Bhandari (@JayantBhandari5) July 22, 2025
அதில் ஒருவர் “பணியாளர்கள் அலுவலகத்தில் நடனமாடி தான் வெளிநாட்டு client ஐ வரவேற்க வேண்டுமா என்றும், அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்களா?… நடனம் ஆடாத மற்ற பணியாளர்கள் பழிவாங்கப்படுவார்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களில் இது போன்ற நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று பலரும் தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து வருகிறார்கள்.
