இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் மிகவும் பரபரப்பான சாலையில் அதிகமான வாகனங்கள் சென்று கொண்டு இருக்கிறது.

 

அப்போது நடுரோட்டில் நின்ற நபர் ஒருவர் பொது இடத்தில் சிறுநீர் கழிக்கிறார். முன்பு இதுபோன்ற பிரச்சனைக்கு நகராட்சியின் அணுகுமுறை வித்தியாசமாக இருக்கும். ஆனால் தற்போது அதிகாரிகள் வழக்கத்திற்கு மாறான பாடத்தை கற்றுக் கொடுக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் நகராட்சியின் “வாட்டர் கன் குழு” அந்த நபருக்கு மறக்க முடியாத பாடத்தை கற்பித்துள்ளது.

அதாவது ஒரு பரபரப்பான பிரதான சாலையின் ஓரத்தில் வழிப்போக்கர்களின் கருத்துக்களை புறக்கணித்து நடு ரோட்டில் ஒருவர் சிறுநீர் கழிக்கிறார். சிறிது நேரம் கழித்து ஒரு நகராட்சி தண்ணீர் லாரி அங்கு வந்தது. எந்த எச்சரிக்கையும் இல்லாமல் வாட்டர் கன் குழாய் மூலம் அவர் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. நொடிகளில் அந்த நபர் தலை முதல் கால் வரை நனைந்து தப்பிக்க முயற்சி செய்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.