தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், கோபால் ஜா என்ற குடிபழக்கமுடைய நபர், மருத்துவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, ஆத்திரத்தில் இளம்பெண் வரவேற்பாளரை கொடூரமாக தாக்கிய பரிதாபகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் ஜூலை 21-ம் தேதி மாலை நந்திவலி பகுதியில் அமைந்துள்ள ‘கல்யாண் கிளினிக்’ மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.
சிசிடிவி காட்சிகளின்படி, கோபால் ஜா மருத்துவமனைக்கு வந்து, முன் பதிவு இல்லாத காரணமாக மருத்துவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, வரவேற்பாளரின் தலைமுடியை பிடித்து இழுத்து, கடுமையாக பலமுறை அடித்து தாக்கினார்.
தாக்குதலுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட வரவேற்பாளர் ஜானகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கழுத்து, மார்பு மற்றும் கால்களில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
मुंबई से सटे कल्याण में एक प्राइवेट हॉस्पिटल में मरीज के परिजनों ने रिसेप्शन पर मौजूद लड़की को बेहरमी से पीटा.
रिसेप्शन पर मौजूद लड़की ने मरीज के परिवार को बोला कि डॉक्टर अभी बिजी है, इस पर मरीज का परिवार गुस्से में आया और लड़की के साथ मारपीट करने लगा. pic.twitter.com/iyje69ihTU
— Vivek Gupta (@imvivekgupta) July 22, 2025
“>
குற்றவாளியான கோபால் ஜாவும், அவரது சகோதரருமான ரஞ்சித் ஜாவும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக டோம்பிவ்லி மன்படா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த காலத்திலும் கோபால் ஜா மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதும், வியாபாரிகளிடம் பணம் பறிக்கும் வகையிலும் இவர் செயல்பட்டிருப்பதும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது போன்ற வன்முறையை தவிர்க்க பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
