நாகப்பட்டினம்: தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) தலைவர் விஜய், நாகை புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் நடந்த பிரசாரத்தில் தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க.வுடன் நேரடி போட்டி என்று திட்டவட்டமாக அறிவித்தார்.
“திருச்சி, அரியலூரில் பிரசாரம் செய்தேன், பெரம்பலூர் செல்ல முடியாததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். தி.மு.க. தேர்தலுக்கு முன் ‘செய்வோம், செய்வோம்’ என்று வாக்குறுதி கொடுத்து, எதையும் செய்யாமல் சிரித்துக்கொண்டே பேசுகிறார்கள். இது மக்களை ஏமாற்றும் வேலை,” என்று குற்றம் சாட்டினார்.
“குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கு இவ்வளவு சொத்து இருக்கிறதென்றால், சொந்த உழைப்பால் சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்? 2026-ல் போட்டி இரண்டு பேருக்கு மட்டுமே – தி.மு.க.வும், த.வெ.க.வும் தான்.
பூச்சாண்டி வேலைகளை விட்டுவிட்டு, தில்லாக, கெத்தாக தேர்தலை சந்தியுங்கள். கொள்கையை பெயருக்கு மட்டும் வைத்து, தமிழ்நாட்டை கொள்ளையடிக்கும் நீங்களா, இல்லை ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் நானா? மக்கள் முடிவு செய்வார்கள்,” என்று விஜய் அதிரடியாக பேசி, தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
