மருத்துவப் படிப்பிற்காகத் தமிழகம் முதல் வடமாநிலம் வரை பல்வேறு முறைகேடுகள் நடக்கும் சூழலில், ஊனமுற்றோர் ஒதுக்கீட்டில் (Disability Quota) சீட் பெற ஒரு இளைஞர் தனது காலையே இழந்துள்ள சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: எம்பிபிஎஸ் சீட் பெறக் கடுமையான போட்டி நிலவி வருவதால், எப்படியாவது ஊனமுற்றோர் ஒதுக்கீட்டில் எளிதாகச் சேர்ந்துவிடலாம் என அந்த இளைஞர் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக அவர் ஒரு கொடூரமான சதியை அரங்கேற்றியுள்ளார். விபத்தில் கால் போனது போலக் காட்டி ஒதுக்கீட்டைப் பெறத் திட்டமிட்ட அவர், மருத்துவ உதவியுடன் தனது ஒரு காலைத் துண்டித்துக் கொண்டுள்ளார்.
விபத்து என்று நாடகமாடி போலிச் சான்றிதழ் பெற முயன்றபோதுதான், போலீசாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தீவிர விசாரணையில், இது விபத்தல்ல, எம்பிபிஎஸ் சீட்டுக்காகத் திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயல் என்பது அம்பலமானது.
ஒரு சீட்டுக்காகத் தனது உடல் உறுப்பையே தியாகம் செய்த அந்த இளைஞரின் விபரீத யோசனை இப்போது அவரைச் சிக்கலில் தள்ளியுள்ளது.
