உத்தரப்பிரதேச மாநிலம், ஹரானா கிராமத்தைச் சேர்ந்த பிரிஜேஷ் குமார் – மம்தா தேவி தம்பதியினருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஓர் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், தாய் மம்தா தேவி, தன்னிடம் வளர்ந்து வந்த அந்தப் பச்சிளம் குழந்தையை வெறும் 95 ஆயிரம் ரூபாய்க்கு அனிதா என்ற பெண்ணிற்கு விற்பனை செய்துள்ளார். பணத்திற்காகப் பெற்ற தாயே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

​தனது குழந்தையைக் காணாததால் அதிர்ச்சியடைந்த தந்தை பிரிஜேஷ் குமார், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மின்னல் வேகத்தில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். தீவிரப் புலனாய்விற்குப் பிறகு, அடுத்த 24 மணிநேரத்திற்குள்ளேயே குழந்தையை பத்திரமாக மீட்டனர். குழந்தையை விற்பனை செய்த தாய் மற்றும் வாங்கிய பெண் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.