அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு நிமிடம் கண் இமைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு எச்சரிக்கைப் பாடமாக அமைந்துள்ளது.

காசியாபாத்தின் இந்திராபுரம் பகுதியில் உள்ள ஒரு உயர் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சுமார் 6-வது மாடி அல்லது அதற்கு மேலிருக்கும் ஒரு பால்கனியின் மெல்லிய இரும்பு கிரில் கம்பியின் மீது ஒரு சிறுவன் எந்த பயமும் இல்லாமல் அமர்ந்திருக்கிறான். அவனது கால்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, கீழே பார்த்தால் மரண பயம் காட்டும் ஆழம்!

சிறுவன் அங்கும் இங்கும் அசைந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, ஒரு நொடி நிலைதடுமாறினால் கூட விளைவு விபரீதமாக முடிந்திருக்கும்.

வீடியோவில் அந்தப் பகுதியில் பெரியவர்கள் யாரும் கண்காணிப்பில் இருப்பதாகத் தெரியவில்லை. அருகில் இருந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் இதை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர, இப்போது பெற்றோரின் அலட்சியம் குறித்து நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.