மனிதர்களுக்குக் கிச்சுகிச்சு மூட்டினால் சிரிப்பு வருவது இயல்பு, ஆனால் எட்டு அடி நீளமுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்றிற்கு நபர் ஒருவர் கிச்சுகிச்சு மூட்டும் வினோதக் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. மஞ்சள் மற்றும் கருப்பு நிறக் கோடுகள் கொண்ட அந்தப் பாம்பின் உடலில் நபர் ஒருவர் தனது விரல்களால் வருடும்போது, அந்தப் பாம்பு மனிதர்களைப் போலவே உடல் சிலிர்த்துத் துள்ளிக் குதிக்கும் காட்சிகள் காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

 

பாம்புகளுக்கு மனிதர்களைப் போன்ற உணர்வுகள் இருக்குமா என்ற விவாதத்தை இந்தக் காணொளி கிளப்பியுள்ள நிலையில், உண்மையில் பாம்புகள் இத்தகைய தொடுதல்களைக் கிச்சுகிச்சு உணர்வாகக் கருதாமல் ஒருவிதமான சீண்டலாகவோ அல்லது தற்காப்பு உணர்வாகவோ கருதி எதிர்வினையாற்ற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

சுமார் 38 நொடிகள் ஓடும் இந்தக் காணொளி லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வரும் வேளையில், ஆபத்தான விலங்குகளுடன் இது போன்ற சோதனைகளில் ஈடுபடுவது விபரீதத்தில் முடியக்கூடும் என வனவிலங்கு ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.