இந்தியப் பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணங்களை கணிசமாக உயர்த்தி மத்திய வெளியுறவு அமைச்சகம் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, இதுவரை ரூ.1,500 ஆக இருந்த 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம் இனி ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே பிரிவில் அவசரத் தேவைகளுக்காக தட்கல் முறையில் விண்ணப்பிப்பதற்கான கட்டணம் ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு முறை வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரவுள்ளது.
இதேபோன்று, கூடுதல் பக்கங்கள் கொண்ட பாஸ்போர்ட் புத்தகங்களுக்கான விண்ணப்பக் கட்டணமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 60 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.3,500 ஆகவும், அதன் தட்கல் முறை விண்ணப்பக் கட்டணம் ரூ.6,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல திட்டமிடுவோர் மற்றும் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்போர் மத்தியில் இந்த திடீர் கட்டண உயர்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
