சென்னை மக்களின் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ சேவையைத் தொடங்குவதற்கான முதற்கட்டப் பணிகளைச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.

எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை பக்கிங்காம் கால்வாய் வழியாகப் படகுப் போக்குவரத்து மற்றும் வாட்டர் மெட்ரோ சேவைகளைச் செயல்படுத்துவது சாத்தியமா என்பது குறித்த விரிவான திட்ட அறிக்கை (DPR) மற்றும் சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. இந்தத் திட்டத்திற்கான டெண்டர் ஆவணங்கள் வருகிற ஆகஸ்ட் 19, 2026 முதல் வெளியிடப்படவுள்ளன. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் செப்டம்பர் 18, 2026-க்குள் தங்கள் டெண்டர்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

வாட்டர் மெட்ரோ திட்டத்துடன் சேர்த்து, ஷெனாய் நகர் மெட்ரோ நிலையத்தின் மேல் அமைந்துள்ள புகழ்பெற்ற திரு.வி.க. பூங்காவைச் சீரமைத்து, பழுதுபார்ப்பு மற்றும் வர்ணம் பூசும் (Painting) பணிகளை மேற்கொள்ளவும் தனியாக டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் ஆவணம் ஆகஸ்ட் 18, 2026 முதல் கிடைக்கும் என்றும், செப்டம்பர் 17, 2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“>

 

சாலைப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், நீர் வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்கவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.