சொத்து வரி சீராய்வு என்ற பெயரில் பொதுமக்களின் மீது கூடுதல் நிதிச் சுமையை திணிக்கும் விவகாரத்தில், மாநகராட்சி அதிகாரிகளின் தன்னிச்சையான செயல்பாட்டிற்கு சென்னை மேயர் பிரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சொத்து வரி உயர்வு என்பது பொதுமக்களைச் சிரமத்திற்குள்ளாக்கும் செயல் என்றும், வரி சீராய்வு என்ற போர்வையில் மக்களின் தலையில் கூடுதல் சுமை சுமத்தப்படுவதாகவும் மேயர் பிரியா வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார். மாநகராட்சியின் மிக முக்கியமான வருவாய் ஆதாரமான சொத்து வரி குறித்து முடிவெடுக்கும் போது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும். ஆனால், மன்றத்தில் ஆலோசிக்காமல் அதிகாரிகளே தாங்களாகவே முடிவெடுத்து அறிவித்துவிட்டு, அதன் பிறகே தனக்குத் தகவல் தெரிவிப்பதாக அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

பொதுமக்களைப் பாதிக்கும் இந்த விவகாரத்தை மிகக் கவனமாகக் கையாண்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட மேயர் பிரியா, இந்த மாத மாமன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் அனைவரும் இந்த பிரச்சினையைப் பூதாகரமாக எழுப்புவார்கள் என்று எச்சரித்துள்ளார்.

“>

 

அதிகாரிகளின் இந்த தன்னிச்சையான போக்கும், பொதுமக்களுக்கு எதிரான வரி உயர்வும் சென்னை மாநகராட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.