துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர்,  ரஜினி அரசியலுக்கு வரணும்ன்னு  சொல்லும்பொழுது….  இதெல்லாம் பேசும் பொழுது…..  உங்களுக்குன்னு ஒரு அமைப்பு இல்லாத,  ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்து ஒரு கட்சியை நடத்த முடியும் என்று எனக்கு தோன்றவில்லை என சொன்னேன். வெளியில் எல்லாரும் என்ன நினைத்தார்கள் ? ரஜினியை அரசியியலுக்கு இழுக்கின்றேன் என நினைத்தார்கள், அது கிடையாது. அவருக்கு ஆலோசனை தான் கூறினேன்..

அதனால் எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் ? நமக்கு கூட்டம் வந்தால் நாம் ஒரு கட்சி நடத்திவிடலாம் என்று… அதுமாதிரி ஏமாந்தவர் தான் கமலஹாசன். கமல்ஹாசன் என்னிடம் பேசினார். நான் கேட்டேன்…  சார் நீங்கள் ஐந்து பேர் இருக்கிறார்களா நீங்கள் நம்புற மாதிரி என கேட்டன்..    ஆனால் நாணயமாய் இல்லை என்று சொல்லிட்டார். முதலில் என்னதான் கூப்பிட்டு கேட்டார்… உடனே நான் நீங்க கட்சி  ஆரம்பிக்காதீர்கள் என்று சொன்னேன்…  ஐந்து பேர் நம்பிக்கையாக இல்லை என்றால்,  ஒரு கட்சி ஆரம்பித்தால்  எப்படி நடக்கும் ?

அதனால் இதெல்லாம் கற்பனையில்லாத….  பவர் நம்ம கையில் வந்தால் என்ன ஆகும் ? என்ன மாதிரி ஆளு எல்லாம் நம்மை சுற்றி இருக்கிறார்கள்…  அவர்கள்  என்ன செய்வார்கள் ? இந்த மாதிரி ஒரு சிந்தனை இல்லாத, ஒரு போக்கு இருப்பதால் கூட்டம் சேருவதால் மட்டும் ஒரு கட்சி அமைக்க முடியாது என்பதை நிறைய பேர் பார்த்திருக்கின்றோம். ஓரளவுக்கு சக்சஸ் ஆனது விஜயகாந்த்… அவராலும்  முடியாமல் போச்சு. அதனால் இந்த கூட்டத்தை மட்டும்  வைத்து கட்சியை அமைக்க முடியாது என்பதற்கு கமல்ஹாசன் உதாரணம் என தெரிவித்தார்.