செய்தியாளர்களிடம் பேசிய மறைந்த முன்னாள் தமிழக முதலவர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, யூடியூப் சேனல் எல்லாம் நிறைய வந்துடுச்சு. நீங்க இன்னைக்கு அவங்கள நல்லா கவனிச்சீங்கன்னா…..  இன்னைக்கு உங்கள தூக்கி பேசுவாங்க,  நாளைக்கு ஒரு ரெண்டு மாசம் கழிச்சு நீங்க அதே லெவல் இருக்க மாட்டீங்கல்ல… அப்ப உடனே  என்ன பண்ணுவாங்க ? ரொம்ப மோசம்னு சொல்லுவாங்க…  நல்லா எல்லாம் எப்படி வளர்ந்து வந்தேன் பாத்தீங்கன்னா?  இந்த மாதிரி மீடியாவால்  வளர்ந்து வரல.

எங்களுடைய உழைப்பு,  மக்களை நம்புனோம்.  மக்கள் எங்களை நம்புச்சு. அதனால நாங்க நல்லபடியா செஞ்சோம்…  நிறைய திட்டங்களை அம்மா கொண்டு வந்தாங்க. அம்மா நிறைய சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அதுல ஒன்னு,  ரெண்டு திட்டங்கள் மீதி இருக்கு, மிச்சம்  இருக்கு. அதை நான் இருக்கிற காலத்துல செஞ்சுடனும்…  அதுதான் உண்மையான நட்புக்கும் சரி… அன்புக்கும் சரி… ஒரு உதாரணம். அதை  நாம செய்யணும் அப்படிங்கறதனால தான் நான் நிறைய பொறுத்து போயிட்டு இருக்கேன்.

நிறைய பேர் என்னை  சந்திக்கிறப்ப கேப்பாங்க….  ஏம்மா உங்களுக்கு கோபமே வராதா ? அப்படின்னு சொல்லுவாங்க….. நீங்களும் நினைச்சீங்களா ? எல்லாருமே கேட்பாங்க…..  எப்படிமா நீங்க  ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க…  நான் வேலை பார்த்துட்டு இருக்கேன் பா.  அதனால இது சொல்றதால என்ன ? இரண்டு நாள் மீடியாகாரங்களுக்கு நான் சாப்பாடு போட்ட மாதிரி ஏதாவது சொல்ல சொல்றீங்களா ? அதெல்லாம் வேண்டாம்.

ஒரு இயக்கம்…   இயக்கத்தை நம்பி தொண்டர்கள் இருக்காங்க…. அவங்க என்னை  நடுவுல நிக்க வச்சு,   உங்களை நம்பி வரும்னு சொல்லும்போது….  நான் அவுங்களை நடு ஆத்துல விட முடியாது இல்லையா ? அது மட்டும் இல்லை…. மக்களையும் விடறதுக்கு தயாராக இல்லை நான்… அவங்களுக்கு செய்ய வேண்டியதுன்னு நிறைய இருக்கு. அதெல்லாம் செய்யணும். அது எல்லாம் செய்யணும்னா….  இந்த மாதிரி கஷ்டங்கள் எல்லாம் வரத்தான் செய்யும. இதை மீறி வருபவர்கள் தான் தலைவராக இருக்க முடியும் என தெரிவித்தார்.