திமுக நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழு உடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஸ்பெயினில் இருந்தபடியே  காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மக்களவைத் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடனும் திமுக தேர்தல் குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் உதயநிதி, கே.என் நேரு, வேலூர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தொகுதி வாரியாக நிர்வாகிகள் கூறிய கருத்துக்கள் குறித்து கேட்டது வருகிறார். தொகுதி வாரியாக நிர்வாகிகள் கூறிய தகவலை முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் ஒருங்கிணைப்பு குழுவினர் கூறி வருகின்றனர். தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் ,மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் ஆலோசனை நடத்துகிறார்.