ஸ்பெயினில் உள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் நிதித்துறை முதன்மை செயலாளர் உதய சந்திரன், கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், ஆலோசனை நடத்தினார்.

வரும் 12ஆம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் ஆளுநர் உரை வரைவு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். ஆளுநர் உரை வரைவில் இடம் பெற வேண்டிய முக்கிய விவரம், நிதிநிலை அறிக்கை குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கேட்டறிந்து ஆலோசனை மேற்கொண்டார்.