உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா பகுதியில் அக்ஷிதா உபாத்யாய் (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது லக்னோவில் உள்ள அமிட்டி என்ற பல்கலைக்கழகத்தில் பயின்று வந்துள்ளார். இதற்கிடையில் நேற்று அவரின் அறை தோழி, வேறொருவர் அறையில் உறங்கியுள்ளார். இதையடுத்து காலை தனது அறைக்கு சென்று அக்ஷிதாவை எழுப்பிய போது அவர் நீண்ட நேரம் ஆகியும் எழவில்லை. இதனால் அவர் விடுதி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தார். அதன்படி விரைந்து வந்த நிர்வாகிகள் கதவை உடைத்து உள்ளே சென்ற பார்ப்பது தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து அறையில் நடத்தப்பட்ட சோதனையில் அக்ஷிதா தனது பெற்றோருக்கு அம்மா, அப்பா நான் உங்களுக்கு நல்ல மகள் இல்லை, என்னை மன்னித்து விடுங்கள் என்று எழுதியுள்ளார். இந்த மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ஒரு நண்பருக்கு தொடர்பு கொண்டு பேசிய நிலையில், அவர் யார் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.