ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் அரங்கேறிய வினோதமான கள்ளக்காதல் விவகாரமும், அதைத்தொடர்ந்து நடந்த அதிரடி சண்டையும் வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டாகி வருவதுடன் நெட்டிசன்களிடையே பெரும் சிரிப்பலையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், நபர் ஒருவர் தனது கள்ளக்காதலியுடன் கட்டிடத்தின் மொட்டை மாடியில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது, தனது கணவனின் கள்ளக்காதல் விவகாரத்தை எப்படியோ தெரிந்துகொண்ட அவரது மனைவி, நேராக அந்த மொட்டை மாடிக்கு விசிட் அடித்துள்ளார்.

அங்கு தன் கணவன் மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாகத் தூங்குவதைக் கண்டு ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அவர், அங்கேயே சண்டை போடத் தொடங்கியுள்ளார். ​மனைவியின் திடீர் என்ட்ரியால் அலறியடித்து எழுந்த கணவனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே மொட்டை மாடியிலேயே பயங்கர கூச்சல், குழப்பத்துடன் கடும் கைகலப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மனைவி, தன் கணவனின் கள்ளக்காதலியை மொட்டை மாடியிலேயே வறுத்தெடுத்து, துரத்தி துரத்தி அடிக்கத் தொடங்கினார்.

மனைவியின் இந்த அதிரடி ருத்ரதாண்டவத்தையும், ஆக்ரோஷமான சண்டையையும் பார்த்த கள்ளக்காதலி, தனக்கு இன்னும் பலத்த அடி விழுந்துவிடுமோ என்ற பயத்தில், அங்கிருந்து தப்பித்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்துள்ளார். கள்ளக்காதலை உடைத்து, அந்தப் பெண்ணை மனைவி அடித்து விரட்டும் இந்த வினோதமான சண்டை காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது அல்காரிதம்களை அதிர வைத்து, காட்டுத்தீயாய் பரவி வருகிறது.