இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, பேட்டில் ஆட்டோகிராஃப் தர மறுத்ததால் குழந்தை ஒன்று ஏமாற்றத்துடன் அழுத வீடியோ சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பலரது இதயத்தையும் உலுக்கியது. இந்நிலையில், பிரபல பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஐபிஎல் முன்னாள் தலைவரான லலித் மோடி, அந்தச் சம்பவத்தைக் கண்டு தனது இதயமே உடைந்துவிட்டதாக மிகவும் நெகிழ்ந்து பேசினார்.

​உடனடியாக அந்த பாட்காஸ்ட் ஹோஸ்ட்டிடம் சொல்லி, அந்தச் சிறுவனை எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி அந்தச் சிறுவன் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, லலித் மோடி அவனுக்கு ஐபிஎல் சீசன் 1-ல் விளையாடிய அனைத்து உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் ஜாம்பவான்களும் கையெழுத்திட்ட மிகவும் அரிய வகை பேட்டைப் பரிசாக வழங்கியுள்ளார்.

அன்னைக்கு ஏமாற்றத்தில் அழுத அந்தச் சிறுவன், இன்று அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பேட்டைப் பெற்றுக்கொண்டு முகமெல்லாம் புன்னகையோடு துள்ளிக்குதிக்கும் வீடியோ நெட்டிசன்களை நெகிழ வைத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.