நாடாளுமன்ற மாநிலங்களவையில்  நீட் தேர்வு குறித்த விவாதம் நடைபெற்றபோது, அதிமுக மூத்த உறுப்பினர் எம். தம்பிதுரை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை ‘அம்மா’ என்று குறிப்பிட்டுப் பேசியது அவையில் சிறிய அளவிலான சலசலப்பையும் காரசாரமான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நீட் விவகாரம் தொடர்பான விவாதத்தின் நடுவே பேசிய தம்பிதுரை, “அம்மா” என்று குறிப்பிட்டுக் கருத்துகளை முன்வைத்தார். அப்போது குறுக்கிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி ஜான் பிரிட்டாஸ், கிண்டலாக “எந்த அம்மா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குச் சற்றும் தாமதிக்காமல் பதிலடி கொடுத்த தம்பிதுரை, “உங்களது அம்மா” என்று பதிலளித்தார். இரு தலைவர்களுக்கும் இடையே நடந்த இந்தத் திடீர் சொற்போர் அவையிலிருந்த மற்ற உறுப்பினர்களிடையே சிரிப்பலையையும் கவனத்தையும் ஈர்த்தது.

“>

 

நீட் விவாதம் தீவிரமாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் நிகழ்ந்த இந்தச் சிறிய வார்த்தைப் போர் நாடாளுமன்ற அரங்கில் சில நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியது.