ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், சாலையில் தனியாகச் சென்ற வாலிபர் ஒருவரிடம் இளம்பெண் ஒருவர் நைஸாகப் பேசி பைக்கில் லிஃப்ட் கேட்டுள்ளார். அந்த வாலிபரும் மனிதாபிமான அடிப்படையில் அந்தப் பெண்ணை தனது பைக்கில் ஏற்றியுள்ளார். ஆனால், வாலிபரின் கவனத்தை திசை திருப்பி, அவரிடம் இருந்த விலை உயர்ந்த மொபைல் போனை அந்தப் பெண் ரகசியமாகத் திருடியுள்ளார். சிறிது தூரம் சென்றதும் தனது போன் காணாமல் போனதை உணர்ந்த அந்த வாலிபர், உடனடியாக அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்து தடுத்துள்ளார்.

​தான் கையும் களவுமாக மாட்டிக்கொண்டதை உணர்ந்த அந்தப் பெண், சிறிதும் பயப்படாமல் அந்த வாலிபரை நடுரோட்டில் வைத்து கெட்ட வார்த்தைகளால் திட்டி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார். அதோடு நில்லாமல், தப்பிப்பதற்காக அங்கிருந்த பொதுமக்களிடம் “இந்த வாலிபர் என்னை பாலியல் துன்புறுத்தல் (Harassment) செய்கிறான்” என கூச்சலிட்டு நாடகமாடியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படி நடந்திருந்தால் உண்மையை அறியாமல் பலரும் அந்த வாலிபரை அடித்து வெளுத்திருப்பார்கள்;

ஆனால், தற்போது பொதுமக்கள் உஷாராகி பெண்ணின் போலி நாடகத்தை நம்பாமல் வாலிபருக்கு ஆதரவாக நின்று உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளனர். இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, “பெண்கள் கார்டை” பயன்படுத்தி தப்பிக்க முயலும் இத்தகைய நபர்களுக்கு எதிராக நெட்டிசன்களிடையே கடுமையான விவாதத்தை கிளப்பியுள்ளது.