உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில், இளம் வாலிபரும் பெண்ணும் ஒன்றாக வெளியில் சுற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடம் கையும் களவுமாக மாட்டியுள்ளனர். தங்களது வீட்டுப் பெண் மற்றொரு வாலிபருடன் ஜோடியாகச் சுற்றுவதைக் கண்டு ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற பெண்ணின் குடும்பத்தினர், நடுரோடு என்றும் பாராமல் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து பெல்ட்டால் மிருகத்தனமாக தாக்கத் தொடங்கினர்.
அடிதாங்க முடியாமல் அந்த வாலிபர் அலறிய துடித்த நிலையில், தனது காதலனைக் காப்பாற்ற நினைத்த அந்த இளம்பெண் உடனடியாக சண்டைக்கு நடுவே புகுந்து வாலிபரைத் தடுத்துப் பாதுகாத்தார். ஆனால், ஆத்திரமடைந்த பெண்ணின் குடும்பத்தினர், தங்களது வீட்டுப் பெண் என்றும் பார்க்காமல் தடுக்க வந்த அந்தப் பெண்ணையும் பெல்ட்டால் கொடூரமாக அடித்து வறுத்தெடுத்துள்ளனர்.
In Aligarh, UP, a young man and woman were spotted by the woman's family while they were out together. The young man was brutally beaten with a belt right in the middle of the road. The woman, who tried to intervene and save him, was also beaten. pic.twitter.com/vyMqr0i5Zi
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 3, 2026
நடுரோட்டில் அரங்கேறிய இந்த அராஜகமான பெல்ட் அடி சண்டைக் காட்சிகள் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது அல்காரிதம்களை அதிர வைத்து, சோசியல் மீடியாவில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
