குறுகலான கிணறு, இயந்திரங்கள் அல்லது இயற்கை பேரிடர்களில் சிக்கும் மனிதர்களை மீட்புக்குழுவினர் போராடி மீட்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம். ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் ஒரே நேரத்தில் வியப்பிலும், அதே சமயம் பெரும் சிரிப்பலையிலும் ஆழ்த்தியுள்ளது ஒரு வினோதமான வீடியோ. அந்த வீடியோவில், ஒரு சிறு குழந்தை எதிர்பாராதவிதமாக ஒரு காலி கேஸ் சிலிண்டருக்குள் புகுந்து, அதற்குள் மிகவும் மோசமாக மாட்டிக்கொண்டுள்ளது. “இந்தச் சின்ன குழந்தை எப்படி இந்த சிலிண்டருக்குள் போனது, எப்படி மாட்டிக்கொண்டது?” என்று சுற்றியுள்ள மக்கள் அனைவரும் தலையைப் பிடித்துக் கொண்டு திகைத்து நிற்கின்றனர்.
ऐसे बच्चे आगे जाके मिसाइल का निर्माण करते हैं
😂😂😅😆 pic.twitter.com/aQrRJrseKi— Niharika Bhardwaj (@NiharikaHindu) May 31, 2026
குழந்தையை வெளியே இழுக்க அங்கிருந்தவர்கள் முயன்றும் முடியாததால், இறுதியாக ஒரு சிறப்பு மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பொதுவாக இது போன்ற ஆபத்தான சூழலில் குழந்தைகள் பயந்து அலறுவது வழக்கம், ஆனால் இந்தச் சுட்டி குழந்தையோ எதைப்பற்றியும் கவலைப்படாமல், முகத்தில் துளியும் பயமில்லாமல் மிகவும் கூலாக விசித்திரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “இவன் தான் எதிர்கால விஞ்ஞானி, இவன் வளர்ந்தா பெரிய மிஸைல் தான் செய்யப்போறான்” என்றும், “ஏதோ பெரிய மிஷன்ல இருக்குற மாதிரி கூலா இருக்கானே!” என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செக்ஷனில் பகிர்ந்து வருகின்றனர்.
