இன்றைய டிஜிட்டல் உலகத்தில் சோசியல் மீடியா இல்லாத நபர்களே இல்லை என்ற நிலை மாறி, அனைவரும் வியூஸுக்காகவும், லைக்குகளுக்காகவும் ரீல்ஸ் செய்து பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். மொபைல் டேட்டாவே தீர்ந்தாலும் கன்டென்ட் தீராத அளவிற்கு வீடியோக்கள் கொட்டிக்கிடக்கும் இந்த சோசியல் மீடியாவில், சில நேரங்களில் மனிதர்களின் உச்சக்கட்ட முட்டாள்தனத்தைக் காட்டும் வீடியோக்களும் வெளியாகி வைரலாவதுண்டு.

அந்த வகையில், வியூஸ் வாங்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக வாலிபர் ஒருவர் செய்த அராஜக வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது. ​அந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் தனது வீட்டின் வெளியே நின்று கொண்டு, தரையில் கிடந்த ஒரு செங்கல்லை எடுத்து அங்கிருந்த ‘Thar SUV’ காரின் பின் பக்க ஜன்னல் கண்ணாடியை நோக்கி ஓங்கி எறிகிறார். இதில் அந்தக் காரின் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து நொறுங்குகிறது. இதில் கொடுமை என்னவென்றால், காரின் கண்ணாடி உடைந்ததைக் கண்டு அங்கிருந்த சில பெண்கள் கூச்சலிட்டு, கைதட்டி ஆரவாரம் செய்கின்றனர்.

அந்த வாலிபரும் ஏதோ பெரிய உலக சாதனை செய்து வரலாற்றில் இடம் பிடித்தது போல செம கெத்தாக போஸ் கொடுக்கிறார். எக்ஸ் (X) தளத்தில் வெளியான இந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து வரும் நிலையில், “ரீல்ஸ் வியூஸுக்காகவும் காசுக்காகவும் இப்படி அடுத்தவன் காரை உடைக்கிறானே, இவன் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நெட்டிசன்கள் கமெண்ட் செக்ஷனில் தங்களது கடுமையான கண்டனங்களை எக்ஸ்பிரஸ் செய்து வருகின்றனர்.