மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பிரதான ரயில் நிலையத்தில், மன உளைச்சல் காரணமாக வாலிபர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற கொடூர சம்பவம் ஒட்டுமொத்த ரயில் நிலையத்தையே உலுக்கியுள்ளது. ஷஹ்டோல் பகுதியைச் சேர்ந்த ஹரியோம் நாம்தேவ் என்ற வாலிபர், அங்குள்ள 3-வது பிளாட்பாரத்தில் ரீவா – ஜபல்பூர் இன்டர்சிட்டி ரயிலுக்காகக் காத்திருந்துள்ளார். காலை 11:30 மணி அளவில் ரயில் பிளாட்பாரத்தை நெருங்கியபோது, யாரும் எதிர்பாராத விதமாக ஹரியோம் தண்டவாளத்தில் குதித்து, தனது இரண்டு கால்களையும் தண்டவாளத்தில் வைத்து எஞ்சின் முன்னால் படுத்துள்ளார்.
ட்ரைன் பைலட் உடனடியாக பிரேக் போட்டும், ரயிலின் எஞ்சின் பகுதி ஹரியோமின் கால்கள் மீது ஏறியது. இதில் அவரது இடது கால் துண்டானதுடன், மற்றொரு கால் பலத்த காயமடைந்தது. இந்தச் சம்பவத்தைக் கண்டு பயணிகள் அலறியடித்த நிலையில், உடனடியாக அங்கு வந்த ஆர்.பி.எஃப் ஜவான்கள் வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
जबलपुर रेलवे स्टेशन के प्लेटफॉर्म नंबर 3 पर एक 23 वर्षीय युवक ट्रेन के सामने पटरी पर लेट गया, जिससे उसका बायां पैर घुटने के नीचे से कट गया और दूसरा पैर भी गंभीर रूप से घायल हो गया। पूरी घटना CCTV में कैद हुई है। घायल युवक की पहचान हरिओम नामदेव निवासी शहडोल के रूप में हुई है।… pic.twitter.com/HhCzQytbF0
— NavBharat Live (@TheNavbharatliv) June 3, 2026
வாலிபரின் பாக்கெட்டில் இருந்த மொபைல் மற்றும் ஆவணங்களை வைத்து அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டபோது, அவர் கடந்த சில நாட்களாகக் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகப் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்தத் திக் திக் தற்கொலை முயற்சி காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது அல்காரிதம்களை அதிர வைத்து சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
