“இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் அதிரடியாக நீக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஐசிசி தலைவர் ஜெய் ஷாவின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் மீண்டும் வெளியாகி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
வரவிருக்கும் அயர்லாந்து தொடருக்கு முன்னதாகவே இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டனை பிசிசிஐ நியமிக்கலாம் என்றும், அதற்கான ரேஸில் ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஆகியோரின் பெயர்கள் பலமாக அடிபடுவதாகவும் கிரிக்கெட் வட்டாரங்களில் யூகங்கள் தீவிரமடைந்துள்ளன
. இந்த பரபரப்பான சூழ்நிலையில், வைரலாகும் அந்தப் பழைய வீடியோவில், ஜெய் ஷா சூர்யகுமார் யாதவிடம், ‘நான் பிசிசிஐ-யில் இருந்தபோதே 2028 ஒலிம்பிக் வரை உங்களுடன் தான் திட்டமிட்டிருந்தேன்; நீங்கள் 2030, 2032 மட்டுமில்லாமல் 2036-லும் தூள் கிளப்ப வேண்டும்’ என்று பேசியுள்ளார்.
🚨 SURYA KUMAR YADAV T20I TEAM CAPTAIN TILL 2028 OLYMPIC 🚨
– Jay Shah has confirmed that Suryakumar Yadav will remain the captain of India’s T20 team until 2028.
Jay Shah Said 🗣️, “When I was in the BCCI, I had planned with you till the 2028 Olympics. But now I’m telling you… pic.twitter.com/fo8cmket5w
— lndian Sports Netwrk (@IS_Netwrk29) May 8, 2026
“>
இதைப்பார்த்த நெட்டிசன்கள் 2028 வரை சூர்யகுமாரின் கேப்டன் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
இருப்பினும், சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நீடிப்பாரா அல்லது புதிய உலகக் கோப்பை தயாரிப்புகளின் ஒரு பகுதியாக ஸ்ரேயஸ், இஷானுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்து பிசிசிஐ அல்லது தேசிய தேர்வாளர்களிடமிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என்பதால், இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.”
