நடந்து முடிந்த ஐபிஎல் 2026 சீசனில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் ஓப்பனிங் பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷி, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தனது அதிரடி ஆட்டத்தால் திரும்பிப் பார்க்க வைத்தார். இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு கேப் வென்றதுடன், போஸ்ட்-சீசன் விருது வழங்கும் விழாவில் மட்டும் 5 விருதுகளை வாரிக்குவித்தார். இவரது ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3-வது இடத்தைப் பிடித்து அசத்தியது.
இந்நிலையில், ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு பிந்தைய கொண்டாட்டத்தின் போது, இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் விராட் கோலி, வைபவ் சூர்யவன்ஷியை நேரில் அழைத்து நீண்ட நேரம் பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த சீசனில் 16 போட்டிகளில் ஆடி 675 ரன்களுடன் 4-வது இடம் பிடித்திருந்தாலும், ஆர்சிபி அணிக்காக தனது இரண்டாவது ஐபிஎல் கோப்பையை வென்று மாஸ் காட்டிய விராட் கோலி, இளம் வீரர் வைபவ்விடம் மிகவும் கனிவாகவும் உற்சாகமாகவும் பேசினார். பீகாரைச் சேர்ந்த வைபவ்விடம் ஹிந்தியில் பேசிய கோலி, “இங்கிருந்து நீ இன்னும் உயரத்திற்குப் போக வேண்டும்.
𝗧𝗵𝗲 𝗺𝗮𝗻 𝘄𝗵𝗼 𝗺𝗮𝗱𝗲 𝗜𝗻𝗱𝗶𝗮𝗻 𝗰𝗿𝗶𝗰𝗸𝗲𝘁 𝗳𝗲𝗮𝗿𝗹𝗲𝘀𝘀 🤝 𝘁𝗵𝗲 𝗯𝗼𝘆 𝘄𝗵𝗼 𝗯𝗮𝘁𝘀 𝗳𝗲𝗮𝗿𝗹𝗲𝘀𝘀 🫶💪
The best piece of advice the 15-year old Vaibhav Suryavanshi could get! And who better than Virat Kohli to help fuel his fire in the right direction.… pic.twitter.com/MUqCRBo0la
— Royal Challengers Bengaluru (@RCBTweets) June 3, 2026
இதுவரை நடந்தது எல்லாமே உன்னுடைய கடின உழைப்பாலும் நம்பிக்கையாலும் தான். வெளியில் யார் என்ன பேசுகிறார்கள், எப்படி பேசுகிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதே… ‘ஏக் பிஹாரி சப் பே பாரி… கதம் கேம்!’ (ஒரு பீகாரிக்காரன் எல்லாருக்கும் மேல மாஸ் காட்டுவான்.. கதை முடிந்தது)” என்று நெஞ்சாரப் பாராட்டி மோட்டிவேஷன் கொடுத்தார். கோலி கொடுத்த இந்த மாஸ் அட்வைஸை வைபவ் மிகவும் மரியாதையுடன் கேட்டுக்கொண்டிருந்த இந்த நெகிழ்ச்சியான வீடியோ, தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
