“நடந்து முடிந்த ஐபிஎல் 2026 தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் 15 வயதே ஆன பீகார் சிங்கம் வைபவ் சூர்யவன்ஷி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களம் இறங்கி 16 போட்டிகளில் 237.30 என்ற அசாத்திய ஸ்ட்ரைக் ரேட்டுடன் 776 ரன்களைக் குவித்து, மிகக் குறைந்த வயதில் ‘ஆரஞ்சு கேப்’ வென்ற வீரர், ஆண்ட்ரே ரஸலின் அதிவேக 1000 ரன்கள் சாதனையையே தகர்த்தவர் எனப் பல சாதனைகளைப் படைத்து ‘பேபி பாஸ்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
இந்த சீசனில் ஆரஞ்சு கேப், எமர்ஜிங் பிளேயர், மோஸ்ட் வேல்யூபில் பிளேயர் (MVP) என 5 முக்கிய விருதுகளை அள்ளிய இந்த 15 வயது சிறுவன், தற்போது இந்தியா-ஏ அணியில் இடம் பிடித்து இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் விளையாட பெங்களூரு வழியாக இலங்கை செல்ல தயாராகி வருகிறார்.
It’s Sooryavanshi Family ♥️😎 pic.twitter.com/i4boyqk0wR
— सीतामढ़ी जिला 🇮🇳 (@SitamarhiJila) June 3, 2026
“>
ஆனால், கேமராக்களுக்கு முன்னால் வைபவ் சூர்யவன்ஷி சிக்சர் மழை பொழிந்ததற்குப் பின்னால், அவனது நிழல் போலக் கூடவே இருந்து கவனித்துக் கொண்ட ஒரு முக்கிய நபர் இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளரான (Team Manager) ரோமி பிந்தர் தான்
அவர்! டக்ட் அவுட், பவுண்டரி லைன், போஸ்ட் மேட்ச் பிரசன்டேஷன், ஏன்… அகமதாபாத் மைதானத்தில் வைபவ் சூர்யவன்ஷி விராட் கோலியைச் சந்தித்த போது மற்றும் வைபவ் சூர்யவன்ஷியின் சொந்த கிராமத்திற்குச் சென்ற போது என எல்லா இடங்களிலும் வைபவ்வுடன் ஒரு கார்டியன் போல, மென்டர் போல இந்த ரோமி பிந்தர் கூடவே இருந்துள்ளார்.
The Run-Machine 🤝 The Six-Hitting Machine
Two eras of match-winners in one special frame 🎬#TATAIPL | #Final | #TheFinalLeap | #RCBvGT pic.twitter.com/FqYwTU4yhJ
— IndianPremierLeague (@IPL) June 1, 2026
“>
ஸ்போர்ட்ஸ் சைக்காலஜியில் மாஸ்டர் டிகிரி முடித்துள்ள இவர், வைபவ் சூர்யவன்ஷி சதம் அடிக்காமல் அவுட்டாகி கண் கலங்கிய போதெல்லாம் தோள் கொடுத்துத் தேற்றியுள்ளார். இவரைப் பற்றிப் பேசிய எம்.எஸ்.தோனி, ‘இந்த சிறுவன் மிகவும் முதிர்ச்சியடைந்த வீரரைப் போல ஷாட்களை ஆடுகிறான்’ என்று பாராட்டியுள்ளார்.
அதேபோல் விராட் கோலியும், ‘எப்போதும் அடக்கமாக இருக்க வேண்டும்’ என வைபவ்வுக்கு அட்வைஸ் செய்துள்ளார்.
இருப்பினும், இந்த ஐபிஎல் தொடரின் போது ஆர்சிபி-க்கு எதிரான குவஹாத்தி போட்டியில் டக்ட் அவுட்டில் வைபவ்வுடன் அமர்ந்து மொபைல் போன் பயன்படுத்தியதாக, பிசிசிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு (ACU) ரோமி பிந்தருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, பின்னர் 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.
#Vaibhav Sooryavanshi forgot to wear his shoes and then asked someone to bring them onto the ground Romi Bhinder is literally taking care of him like a #father #IPL pic.twitter.com/vYk40Cwank
— Radhekatiwari (@radhekatiw85441) April 29, 2026
“>
மருத்துவக் காரணங்களுக்காகவே அவர் போன் பயன்படுத்தினார் என்பதால் பிசிசிஐ இந்த விவகாரத்தை பெரிதாக்கவில்லை, வைபவ் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது வைபவ் சூர்யவன்ஷி தனது சொந்த ஊருக்குத் திரும்பிய போது, அங்கு கூடிய பிரம்மாண்ட கூட்ட நெரிசலில் இருந்து காரில் ஏறும் வரை வைபவ்வை பத்திரமாகப் பாதுகாத்து அனுப்பியுள்ளார் ரோமி.
— justice (@KohliGod139016) June 3, 2026
“>
‘ஒரு 15 வயது சிறுவன் இவ்வளவு பெரிய தொடரில் தனித்துவிடப்பட்டு விடக்கூடாது’ என்பதில் கண்ணும்கருத்துமாக இருந்த ரோமி பிந்தர் தான், வைபவ்வின் இந்த அசுர வளர்ச்சிக்குப் பின்னாலிருக்கும் நிஜமான திரைக்குப் பின்னால் இருக்கும் நாயகன் என்று அரசியல் மற்றும் விளையாட்டு வட்டாரங்கள் உருகிப் பேசி வருகின்றன.”
