கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவின் கிராண்ட் முஃப்தி காந்திபுரம் ஏபி அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதாவது ஏமன் நாட்டைச் சேர்ந்த மஹ்தி என்பவரை விஷ ஊசி போட்டு கொலை செய்த வழக்கில் நிமிஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.
இந்த மரண தண்டனை ரத்து செய்ய மத்திய அரசு பல்வேறு முயற்சிகள் செய்த நிலையில் பின்னர் கிராண்ட் முப்தி இந்த விவகாரத்தில் தலையிட்டார். இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு தற்போது மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அதே நேரத்தில் இது தொடர்பாக ஏமன் அரசிடம் எழுத்துப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வ கடிதம் பெறவில்லை எனவும் முதலில் இடைக்காலமாக மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது முழுமையாக ரத்து செய்யப்பட்டதாகவும் வாய்மொழியாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
