முன்பெல்லாம் சட்டப்பேரவையில் ஏதேனும் ஒரு கருத்தைச் சொன்னவுடன், அமைச்சர்கள் உடனுக்குடன் எழுந்து பதில் அளிக்கும் நடைமுறை இருந்தது, ஆனால் தற்போது அந்த நிலை முற்றிலுமாக மாறியுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
“ஒரு வார்த்தை சொன்ன உடனே அமைச்சர் எழுந்து பதில் சொல்லும் காலம் இருந்தது.. அது இப்போ மாறியிருக்கிறது.. முழுமையாக பேசி முடித்த பின்னர் பதில் சொல்ல வேண்டும் என்று முதல்வர் சொல்லியிருக்கிறார்” – அமைச்சர் செங்கோட்டையன்#Sengottaiyan | #TNAssembly | #CMVijay pic.twitter.com/lUiTek9RCz
— PttvOnlinenews (@PttvNewsX) June 22, 2026
“>
எதிர்க்கட்சிகளோ அல்லது பிற உறுப்பினர்களோ தங்களது கருத்துகளை முழுமையாகப் பேசி முடித்த பிறகுதான் அமைச்சர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த புதிய நடைமுறை முறையாகப் பின்பற்றப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டினார்.
