தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் தனிச் செயலாளராக (அரசியல்) ஜெகதீஷ் பழனிசாமி அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அரசாணையைத் தமிழக அரசின் பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர் வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் விஜய் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்த காலத்தில் அவருடைய முதன்மை மேலாளராகப் (Manager) பணியாற்றிய ஜெகதீஷ் பழனிசாமி, விஜய் அரசியல் கட்சி தொடங்கி முதலமைச்சராகப் பொறுப்பேற்றது வரை அவரது மிக நெருங்கிய உதவியாளராகச் செயல்பட்டு வந்தார்.
தற்போது அவருக்கு இந்த உயரிய அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
